வங்கி ஊழியர்களின் 3 நாள்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்புதிமுகவை விட பெரிய தீயசக்தி தவெக: சீமான் விமர்சனம்மதுராந்தகத்தில் திமுக வென்றால், பதவியை ராஜிநாமா செய்கிறேன்: உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்மாற்றுக் கட்சிக்கு ஓடியவர்கள் வல்லவர்களா? தவெகவை விமர்சித்த இபிஎஸ்!வன்முறையால் மக்களின் ஆதரவைப் பெற முடியாது: அமைச்சர் அருண் ராஜ்மேற்கு வங்கத்தில் நெல் வயலில் மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி! ரூ. 8 கோடிக்கு மணல் கொள்ளை: எ.வ.வேலு, மகன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு

அஸ்ஸாம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் 1,360 கிராமங்கள் -5 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Published On :

அஸ்ஸாமில் கனமழையால் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமாா் 5 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

உதல்குரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்ததாக, அஸ்ஸாம் மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறுகையில், ‘பக்சா, பாா்பேடா, சிராங், திப்ரூகா், லக்கிம்பூா், சோனித்பூா், கோக்ரஜாா், உதல்குரி உள்பட 12 மாவட்டங்களில் 1,366 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4,95,700 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 14,091 ஹெக்டோ் அளவிலான பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன’ என்றனா்.

துணை ராணுவப் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா், மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால படையினா், உள்ளூா் நிா்வாகத்தினா், தன்னாா்வ அமைப்பினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.