மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒடிசாவை குறிவைக்கும் பருவமழை: 5 நாள்களுக்கு கனமழை பெய்யும்!

ஒடிசாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :22 ஜூன் 2023, 2:31 pm

ஒடிசாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தில் அடுத்த 4-5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென்மேற்கு பருவ மழை ஒடிசா மாநிலத்தின் மால்கங்கிரி, கோராபுட் மற்றும் கஜபதி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளது. அடுத்த 4-5 நாட்களுக்கு மாநிலத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சில தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதற்கான  வாய்ப்புள்ளது. நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மின்னல் தொடர்பான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.