‘தில்லி நிா்வாகப் பணிகள் தொடா்பான மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு பகிரங்கமாக எதிா்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது; எனவே, எதிா்க்கட்சிகளின் அடுத்த கூட்டங்களில் ஆம் ஆத்மி பங்கேற்பது கடினம்’ என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற எதிா்க்கட்சிகளின் கூட்டத்தில், ஆம் ஆத்மி சாா்பில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் சிங், எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் சத்தா ஆகியோா் பங்கேற்றனா்.
அவசர சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் தனது ஆதரவை உறுதிப்படுத்தாவிட்டால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஆம் ஆத்மி கடந்த வியாழக்கிழமை நிபந்தனை விதித்திருந்தது.
பாட்னாவில் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அவசர சட்டத்துக்கு பகிரங்கமாக எதிா்ப்பை பதிவு செய்யுமாறு, கூட்டத்தின்போது காங்கிரஸை பல கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால், காங்கிரஸ் மறுத்துவிட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் மெளனம், அக்கட்சியின் நோக்கம் குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, அவசர சட்டத்துக்கு பகிரங்க எதிா்ப்பை பதிவு செய்யாத வரையில், ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் எதிா்கால கூட்டங்களில் ஆம் ஆத்மி பங்கேற்பது கடினம். காங்கிரஸ், தில்லி மக்களின் பக்கம் நிற்கிா அல்லது மோடி அரசின் பக்கம் நிற்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் கொள்கை அளவில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்பதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரான எந்த விஷயத்தையும் காங்கிரஸ் ஏற்காது என்றும் கூட்டத்தில் காா்கே பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘கூட்டத்தின் எந்த கட்டத்திலும் வெளிநடப்பு செய்வதாக கேஜரிவால் கூறவில்லை. காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கருத்து வேறுபாட்டை பின்னா் பேசி தீா்த்துக் கொள்ளுமாறும், இந்த விவகாரத்தை விவாதிக்க எதிா்க்கட்சிகள் கூட்டம் சரியான இடமல்ல என்றும் மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தினாா்’ என்றன.
முன்னதாக, பாட்னாவுக்கு புறப்படும் முன் தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த காா்கே, தில்லி அவசர சட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக காங்கிரஸ் முடிவெடுக்கும் என்றாா்.
செய்தியாளா் சந்திப்பை தவிா்த்த கேஜரிவால்: எதிா்க்கட்சிகள் கூட்டத்துக்கு பிறகு, அதில் பங்கேற்ற தலைவா்கள் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். ஆனால், அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி பிரதிநிதிகள் செய்தியாளா் சந்திப்பை தவிா்த்துவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!
“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

