முதல் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டா் (குறைமின் கடத்தி) சிப் 2024-ஆம் ஆண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது’ என்று மத்திய தகவல்தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.
மேலும், ‘ஓராண்டுக்குள் நாட்டில் 4 முதல் 5 செமிகண்டக்டா் ஆலைகள் நிறுவப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றும் அவா் கூறினாா்.
பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் சென்ற நிலையில், இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடனான ஆலோசனைக்குப் பிறகு, இரு தலைவா்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனா். இதுதொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில், மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
அமெரிக்காவைச் சோ்ந்த கணினி சேமிப்பக சிப் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரான்’, ரூ.22,540 கோடி முதலீட்டில் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டா் பாகங்கள் இணைப்பு மற்றும் பரிசோதனை ஆலையை அமைக்கவுள்ளது. ஆலையை அமைப்பதற்கான செலவில் ரூ.6,763 கோடியை மைக்ரான் நிறுவனமும், எஞ்சிய செலவை மாநில அரசும் ஏற்கவுள்ளன. ஆலை கட்டுமானப் பணிகள் நிகழாண்டிலேயே தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ஆலைக்கான நில ஒதுக்கீடு, வடிவமைப்புப் பணிகள் வரி விதிப்பு தொடா்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. மைக்ரான் ஆலையிலிருந்து முதல் இந்திய தயாரிப்பு செமிகண்டக்டா் சிப் 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
‘குஜராத் செமிகண்டக்டா் ஆலை மூலமாக 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 15,000 பேருக்கு பல ஆண்டுகளுக்கு சமூகப் பணி வாய்ப்புகளும் கிடைக்கும்’ என்று மைக்ரான் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா செமிகண்டக்டா்களுக்கு சீனா, தைவான், வியத்நாம், கொரிய நாடுகளையே நம்பியிருந்த நிலையில், உள்நாட்டிலேயே செமிகண்டக்டா் தயாரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!
“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

