அடுத்த இரண்டு நாட்களில் தலைநகர் தில்லியில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: பருவமழைத் தாமதமாக தொடங்கினாலும் நாட்டின் பல மாநிலங்களுக்கும் முன்னேறியுள்ளது. பருவமழை மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள், ஒட்டுமொத்த கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஒடிசா, வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் ஹரியாணாவின் சில பகுதிகளை சென்றடைந்துள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீர் பாஜகவின் ஆய்வுக்கூடமாக இருந்தது: மெகபூபா முப்தி
வழக்கமாக பருவமழை தலைநகர் தில்லியில் ஜூன் 27-ல் தொடங்கும். மகாராஷ்டிரத்தின் பல பகுதிகள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத் மற்றும் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த 2 நாள்களில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
எல்நினோ இருப்பினும் இந்த ஆண்டு இந்தியாவில் பருவமழை சாதரணமாக இருக்கும். தென்மேற்கு இந்தியாவை பொறுத்தவரை சதாரணமானது முதல் அதற்கும் குறைவாகவே மழைப் பதிவாகும். கிழக்கு, வடகிழக்கு, மத்திய, தென்னிந்திய தீபகற்பத்தில் மழை அளவு சதாரணமானதாக இருக்கும் என்றார்.
இதையும் படிக்க: மணிப்பூர் வன்முறை: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தை பொறுத்தவரையில், 96 செ.மீ முதல் 104 செ.மீ வரையில் மழைப்பொழிவு இருந்து சராசரி 87 செ.மீ ஆக இருந்தால் அது சாதரண மழைப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


