மணிப்பூரில் ஒரே நாளில் 12 பதுங்கு குழிகள் அழிப்பு
பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது மணிப்பூரில் ஒரே நாளில் 12 பதுங்கு குழிகளை அழிக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின் போது மணிப்பூரில் ஒரே நாளில் 12 பதுங்கு குழிகளை அழிக்கப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் தமேங்லாங், கிழக்கு இம்பால், பிஷ்ணுபூர், கங்கோக்பி, சுரசந்த்பூர் மற்றும் கக்சிங் மாவட்டங்களில் நடந்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 12 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன. சாஹும்பையில் உள்ள நெல் வயலில் மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள கங்வை மற்றும் எஸ் கோட்லியன் கிராமங்களுக்கு அருகே ஒரு நாட்டு வெடிகுண்டு மீட்கப்பட்டது.
இதையும் படிக்க- சென்னையில் தக்காளி விலை திடீா் உயா்வு: கிலோ ரூ. 80-க்கு விற்பனை
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவை செயலிழக்க வைக்கப்பட்டடன. இவ்வாறு அதில குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் வடகிழக்கு மாநிலத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து இதுவரை மொத்தம் 1,100 ஆயுதங்கள், 13,702 வெடிமருந்துகள் மற்றும் 250 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறிய, கைவிடப்பட்ட வீடுகளில் திருட்டு மற்றும் தீ வைத்ததற்காக 135 பேரை மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் வீடு மட்டுமின்றி மத்திய, மாநில அமைச்சர்களின் வீடுகளும் தீக்கரையாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...