அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஐந்து வந்தே பாரத் ரயில்: நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி காமலாபதி ரயில் நிலையத்தில் ஐந்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 

News image
Updated On :26 ஜூன் 2023, 10:37 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி காமலாபதி ரயில் நிலையத்தில் ஐந்து வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 

மும்பை-கோவா, பெங்களூரு-ஹூப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர், போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் ரயில்கள் தொடங்கி வைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். 

பின்னர், பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்காக ஷாஹ்தோல் மாவட்டத்தில் உள்ள பக்காரியா கிராமத்திற்குச் செல்கிறது.

அதன்பின்னர், மாநிலம் முழுவதும் சுமார் 3.57 கோடி பயனாளர்களுக்கு ஆயுஷ்மான் கார்டுகள் விநியோகிக்கும் திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.