புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு அந்த மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அறிவித்துள்ளார்.
யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி நிர்வாகத்தின் உள்துறை வெளியிட்ட உத்தரவில்,
ஏப்ரல் 9 அன்று புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம் 'மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின் கீழ், பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகவே இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளின் பல்வேறு பிரிவுகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஏப்ரல் 9 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக இருக்கும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், காரைக்கால் பிராந்தியத்தில் 5 தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் தலா ஒரு தொகுதியும் அமைந்துள்ளன.
Summary
Lt Governor of Puducherry has declared April 9 a public holiday under the Negotiable Instruments Act in view of the election to the territorial Assembly that day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு! சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ல் பொது விடுமுறை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

