
தாணே: மகாராஷ்டிரா மாநிலம் தாணே நகரில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பக்கத்து வீட்டின் சுவரில் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து தாணே மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவரான யாசின் தாட்வி தெரிவித்ததாவது:
சரியாக இன்று காலை 7.15 மணியளவில் அருகிலுள்ள வீட்டின் சுவரில் பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளை தீயணைப்பு படை மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு வீரர்கள் விரைவாக வந்து அகற்றினர்.
தாணே மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை சராசரியாக 143.30 மி.மீ மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 129 மி.மீ மழை பெய்தது என்று மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.