நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல்: தில்லியில் ராகுல் ஆலோசனை!

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :28 ஜூன் 2023, 6:19 am

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியைத் தக்க வைக்க தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அந்த மாநில தலைவர்களுடன் தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.