வட மாநிலங்களிலும் சதமடித்த தக்காளி விலை!
தமிழகத்தை தொடர்ந்து வட மாநிலங்களிலும் தக்காளி விலை 100 ரூபாயை கடந்துள்ளது.


தமிழகத்தை தொடர்ந்து வட மாநிலங்களிலும் தக்காளி விலை 100 ரூபாயை கடந்துள்ளது.
சென்னையில் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, செவ்வாய்க்கிழமை ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தில்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று காலை நிலவரப்படி சில்லரை வியாபாரக் கடைகளில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்க தமிழகத்தில் உள்ள பசுமை பண்ணை அங்காடிகளில் கொள்முதல் விலையிலேயே தக்காளியை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...