உத்தரப் பிரதேசத்தில் ஷாருக்கான் பெயருடைய ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை சந்தையில் 300 கிலோ எடையுடைய ஆடு ரூ.6 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவிலுள்ள ஆடுகள் விற்பனை சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
இந்த சந்தையில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தையில் ஷாருக்கான் எனப் பெயரிடப்பட்ட 300 கிலோ எடையுடைய அஜ்மீரி இன ஆடு ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது. அந்த ஆட்டின் உரிமையாளரான இர்ஃபான் ஆக்ஹா, தான் வளர்க்கும் ஆடுகளுக்கு ஹிந்தி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இட்டு வளர்த்துள்ளார்.
பதான், சுல்தான், ராஜ்குமார் போன்ற பெயருடைய ஆடுகளையும் வளர்த்து வருவதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.
மேலும், ஷாருக்கான் எனும் பெயருடைய மற்றொரு ஆடு, ரூ.2.15 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த இரு ஆடுகளையும் மலிஹாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பக்ரீத் பண்டிகைக்காக வாங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


