மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூர் மக்களின் நிலையைக் கண்டு மனமுடைந்தேன்: ராகுல் காந்தி

மணிப்பூர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த ராகுல் காந்தி மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜூன் 2023, 2:06 pm

மணிப்பூர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த ராகுல் காந்தி மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு சென்றுள்ளார். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், தங்களது வீடுகளை இழந்தவர்களை பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான அழுகையை என்னால் காண முடிந்தது.  மணிப்பூருக்கு தற்போது அமைதி தேவை. நமது அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து மணிப்பூரில் அமைதியைக் கொண்டுவருவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சாலை மார்க்கமாக சென்று சந்திக்க ராகுல் காந்திக்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.