மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக அவர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு நேரில் சென்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கோரி வருகின்றனா். இதற்கு சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியினா் எதிா்ப்புத் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக இரண்டு சமூகத்தினா் இடையிலான மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் பலியாகியுள்ளனா். 3,000-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனர். வன்முறை சம்பவங்களால் அந்த மாநிலத்தில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை மணிப்பூா் வந்தாா். அங்கு வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சுராசந்த்பூரில், சுமாா் 200 போ் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அவா்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.

இந்நிலையில், இன்று மொய்ராங்கில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு நேரில் சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பின்னர், இம்பாலில் உள்ள சிந்தனையாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களை ராகுல் சந்திக்க உள்ளார்.

ராகுல் சுராசந்த்பூா் நோக்கி சென்றபோது விஷ்ணுபூா் மாவட்டத்தில் அவரின் வாகனம் மற்றும் அவருடன் சென்ற இதர வாகனங்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. இறுதியில் சுராந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


