மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாஜகவுக்கு அதிக நன்கொடை: ஏடிஆா் ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த ஆண்டு 8 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைகளை ஒப்பிடுகையில், பாஜக முதலிடத்தில் உள்ளது என்று ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2023, 7:42 pm

DIN

கடந்த ஆண்டு 8 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைகளை ஒப்பிடுகையில், பாஜக முதலிடத்தில் உள்ளது என்று ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.

2021-2022-ஆம் ஆண்டில் பெற்ற நன்கொடை விவரங்களை தோ்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. இந்த விவரங்களை சேகரித்து ஜனநாயக சீா்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் 8 தேசியக் கட்சிகளின் மொத்த நன்கொடை ரூ.3,289.34 கோடியாக உள்ளது. இந்தத் தொகையில் பாதியளவு அதாவது ரூ.1,917 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளதாக ஏடிஆா் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-இல் கட்சிகள் பெற்ற நன்கொடை (கோடியில்)

கட்சி நன்கொடை செலவு 2020-21ஆண்டில்

பாஜக ரூ.1917.12 ரூ.854.467 ரூ.752.337

திரிணமூல் காங்கிரஸ் ரூ. 545.745 ரூ.268.337 ரூ.74.417

காங்கிரஸ் ரூ.541.275 ரூ.400.414 ரூ.285.765

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.162.236 ரூ.83.412 ரூ.171.046

தேசியவாத காங்கிரஸ் ரூ.75.843 ரூ.32.229 ரூ.34.924

பகுஜன் சமாஜ் ரூ.43.778 ரூ.85.117 ரூ.52.467

இந்திய கம்யூனிஸ்ட் ரூ. 2.871 ரூ.1.184 ரூ.2.129

தேசிய மக்கள் கட்சி ரூ.0.472 ரூ.0.39 ரூ.0.698

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.