ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

காதல் கடிதம் தெரியும்! ...காதல் முறிவுக் கடிதம் தெரியுமா?

காதலைக் கடிதம் மூலம் வெளிப்படுத்திய தலைமுறை சென்று காதல் முறிவைக் கடிதம் மூலம் உறுதி செய்து, அதனை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களுக்கு அறிவிக்கிறது இந்தக்கால தலைமுறை. 

News image

இணையத்தில் வைரலாகும் கடிதம்

Updated On :3 மார்ச் 2023, 12:07 pm IST

காதலை வெளிப்படுத்த கடிதம் எழுதுவதை அறிந்திருப்போம், காதல் முறிவுக்கு கடிதம் எழுதிய காதலனைப் பார்த்ததுண்டா?

காதலைக் கடிதம் மூலம் வெளிப்படுத்திய தலைமுறை சென்று காதல் முறிவைக் கடிதம் மூலம் உறுதி செய்து, அதனை அதிகாரப்பூர்வமாக மற்றவர்களுக்கு அறிவிக்கிறது இந்தக்கால தலைமுறை. 

நீங்கள் காதலித்துள்ளீர்களா? காதலித்திருந்தாலும் காதல் கடிதம் எழுதியதுண்டா? அப்படி செய்திருந்தால் கடிதம் எழுதுவதும் அதைக் கொடுப்பதும் எத்தனை சிரமமானது என்பதை அனுபவசாலிகள் உணர்ந்திருப்பர். 

காதல் கடிதம் எப்படி யாருக்கும் தெரியாமல் கொடுக்கப்படுகிறதோ, அதேபோன்றே காதல் முறிவுகளுக்கும் இருவருக்குள்ளாகவே முடிந்துவிடும். இது 90ஸ் கிட்ஸ் எனப்படும் கடந்தகால தலைமுறையினருடைய காதலாக இருக்கக்கூடும். 

ஆனால், இப்போது நிலைமையே வேறு என்பதை உணரும் வகையில் காதல் ஜோடிக்கு நடுவே தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காதலில் இனி நீடிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்த காதலியின் விருப்பத்தைத் தொடர்ந்து, கடிதம் எழுதி அதில் கையெழுத்திட்டுத் தருமாறு வாட்ஸ்ஆப்பில் பிடிஎஃப் கடிதம் அனுப்பியுள்ளார் காதலர். 

அதற்கு காதலியும் சரி எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிக்காட்டி, டிஜிட்டல் கையெழுத்துப்போட்டுக் கொடுத்துள்ளார். அதனை அந்தக் காதலர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது அதிகாரப்பூர்வமான காதல் முறிவு எனக் குறிப்பிட்டு கடிதத்தையும், காதலியுடனான வாட்ஸ்ஆப் சாட்களையும் இணைத்துள்ளார். 

அந்தக் கடிதம் தற்போது காதல் முறிவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விருப்பமான கடிதமாக மாறியுள்ளது. 

அந்தக் கடிதத்தில் காதலி பன்சாலுக்கு காதலன் வெலின் குறிப்பிட்டுள்ளதாவது, ''உன் உடல்நிலை நன்றாக இருப்பதாக நம்புகிறேன். என்னை காயப்படுத்திய நிகழ்வை நினைவூட்ட விரும்புகிறேன். நாம் நமது உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சமீபகாலமாக எழுந்துள்ளது. 

என்னுடைய முடிவு உன்னில் எந்தவித எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாது. நீ அழகான பெண். ஆனால் நான் அறிந்த சில தகவல்கள் என்னை யோசிக்க வைத்துள்ளது. நமது உறவின் அடிப்படையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளது. எனது நலனை விரும்புபவர்களுக்காக நான் இந்த உணர்வை மதித்தாக வேண்டும். 

இந்த முடிவை நான் எடுத்தது அத்தனை எளிதில் அல்ல என்பதை நீ அறிவாய். ஆம், உன்னைப் பிரிவது கடினம் என்பது தெரியும். ஆனால், நான் எனக்கும் என் தனித்தன்மைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும். என்னுடைய இந்த முடிவை நீ மதிப்பாய் என நம்புகிறேன். உனக்கு என் வாழ்த்துகள்'' என்று கடிதத்தில் குறிப்பிட்டு காதலியின் கையெழுத்தையும் கோரியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.