திரிபுராவில் மார்ச் 8-ல் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
திரிபுராவில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் பாஜக-ஐபிஎஃப்டி அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.


திரிபுராவில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் பாஜக-ஐபிஎஃப்டி அரசின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் வென்றுள்ளது.
பிரதமரின் மாநில பயணம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் எஸ்.கே.சின்ஹா ஆலோசனை நடத்திவருகிறார்.
மார்ச் 8-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் திரிபுரா வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
முதல்வர் மாணிக் சாஹா தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யாவிடம் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.
இதையடுத்து, திரிபுராவின் விவேகானந்தர் மைதானத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் அழைக்கப்படுவார்கள் என்று பாஜக மாநில துணைத் தலைவர் ரெபதி திரிபுரா சனிக்கிழமை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...