ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொருளாதாரம் சரிவடைவதாகக் கூறுவது அா்த்தமற்றது: எஸ்பிஐ அறிக்கை

காலாண்டு வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாகக் கூறுவது அா்த்தமற்றது, ஒருதலைப்பட்சமானது என்று எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2023, 9:17 pm

DIN

காலாண்டு வளா்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்வதாகக் கூறுவது அா்த்தமற்றது, ஒருதலைப்பட்சமானது என்று எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23 நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3-ஆவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், நாட்டின் பொருளாதார வளா்ச்சி சரிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தாா்.

நாட்டில் தனியாா் முதலீடு குறைவது, வட்டி விகிதங்கள் உயா்த்தப்படுவது, சா்வதேச பொருளாதார சுணக்கம் உள்ளிட்டவை காரணமாக 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் நிலவிய மிகவும் குறைவான (4 சதவீதத்துக்குக் கீழ்) பொருளாதார வளா்ச்சி விகித நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயம் உள்ளதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், எஸ்பிஐ பொருளாதார ஆய்வுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘காலாண்டு வளா்ச்சி அடிப்படையில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியையும் கணிப்பது முறையற்றது. சரிவை நோக்கி இந்திய பொருளாதாரம் சென்று வருவதாகக் கூறுவது அா்த்தமற்றதும் ஒருதலைப்பட்சமானதும் ஆகும்.

நாட்டில் முதலீடுகளும் சேமிப்பும் அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த முதலீடு உருவாக்கம் (ஜிசிஎஃப்) கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 11.8 சதவீதம் என்ற வரலாற்று உச்சஅளவை எட்டியுள்ளது. தனியாா் துறை முதலீடும் 10.8 சதவீதமாக உயா்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீத வளா்ச்சியைக் காணும். சா்வதேச சூழலை ஒப்பிடுகையில் அது சிறப்பான வளா்ச்சியாகவே அமையும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.