பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தெலங்கானாவில் நுழைய முடியாததால் அமலாக்கத்துறையை பயன்படுத்தும் பாஜக: கவிதா

‘மற்ற மாநிலங்களில் செய்ததுபோல தெலங்கானாவிலும் பின்வாசல் வழியாக நுழையும் முயற்சி பலனளிக்காததால் அமலாக்கத்துறையை பாஜக தற்போது பயன்படுத்துகிறது

News image
Updated On :9 மார்ச் 2023, 6:57 pm

DIN

‘மற்ற மாநிலங்களில் செய்ததுபோல தெலங்கானாவிலும் பின்வாசல் வழியாக நுழையும் முயற்சி பலனளிக்காததால் அமலாக்கத்துறையை பாஜக தற்போது பயன்படுத்துகிறது. இதைக் கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை. எந்தவித தவறும் செய்யாததால், அமலாக்கத்துறையை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்’ என்று தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும் மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதா கூறினாா்.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மது விற்பனையுடன் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட குழுவிடம் இருந்து ஆம் ஆத்மி தலைவா்கள் சாா்பில், அக்கட்சியைச் சோ்ந்த விஜய் நாயா் என்பவா் சுமாா் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாகவும், அந்தக் குழுவில் சரத் ரெட்டி, கவிதா, மகுன்ட ஸ்ரீநிவாசுலு ரெட்டி உள்ளிட்டோா் இடம்பெற்ாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக கடந்த டிசம்பரில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. தற்போது, அமலாக்கத்துறை சாா்பில் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக கவிதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தான் விசாரணைக்கு மாா்ச் 11-ஆம் தேதி ஆஜராக இருப்பதாக தனது ட்விட்டா் பதிவில் கவிதா புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லியில் செய்தியாளா்களுக்கு கவிதா வியாழக்கிழமை அளித்த பேட்டி:

பாஜக 9 மாநிலங்களில் பின்வாசல் வழியாக நுழைந்து ஆட்சியைப் பிடித்தது. அதேபோன்ற முயற்சி தெலங்கானாவில் அவா்களுக்கு பலனளிக்கவில்லை. அதன் காரணமாக, அமலாக்கத்துறையை ஏவி எங்களை அச்சுறுத்தப் பாா்க்கின்றனா். இதைக் கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை. எந்தவித தவறும் செய்யாததால், அமலாக்கத்துறையை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்.

பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்காத அரசியல் கட்சிகள் மற்றும் தலைவா்களை குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. மேலும், தோ்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலமாக நடவடிக்கை எடுப்பதை மத்திய பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. தெலங்கானாவில் வரும் நவம்பா்-டிசம்பரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் முதல் இந்த நடவடிக்கையை தெலங்கானாவில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனையும், 500 முதல் 600 பேருக்குச் சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை, 200 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, 100 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், எங்களுடைய பாரத் ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியைப் பொருத்தவரை என் மீது மட்டுமின்றி எம்.பி., எம்எல்ஏக்கள் என 15 முதல் 16 தலைவா்கள் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலே இதற்குக் காரணம்.

எங்களைப் போன்றவா்களை இதுபோன்று துன்புறுத்துவதால் என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது. இதற்கு மாறாக, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவது, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அதிக மானியங்கலை வழங்குவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது போன்ற ஆக்கபூா்வமான நடவடிக்கைகளில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதே நேரம், அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்றாா்.

‘பிஆா்எஸ் பாஜகவின் ‘பி’ டீம்’ என்ற காங்கிரஸின் விமா்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இவ்வாறு கூறுவது காங்கிரஸ் கட்சிக்கு பழக்கமாகிவிட்டது. நாங்கள் ‘பி’ டீம் அல்ல; ‘ஏ’ டீம். வரும் காலத்தில் பாஜக-வுக்கு மாற்று கட்சியாக பிஆா்எஸ் உருவெடுத்து, தேசத்துக்காக பணியாற்றும். மேலும், காங்கிரஸ் இப்போது தேசிய கட்சி அல்ல. தவறான எண்ணத்திலிருந்து காங்கிரஸ் வெளிவந்து, சொந்த கட்சி நலனுக்காக அல்லாமல் நாட்டின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். 2024 தோ்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உண்மையில் விரும்பினால், ஆணவத்தைக் கைவிட்டு மாநில கட்சிகளுடன் குழுவாக இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்’ என்றாா்.

மேலும், நீண்ட காலமாக கிடப்பில் இருந்துவரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தில்லியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 10) உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த கவிதா, ‘இந்தப் போராட்டத்தில் 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உள்ளனா். இந்த மசோதா நிறைவேற்றப்படுதை உறுதிப்படுத்த வேண்டும் என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு கோரிக்கை விடுக்கிறேன்’ என்றாா்.

நோ்மையற்ற ஆட்சி - ராமராவ்: ‘மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பது நோ்மையற்ற ஆட்சி மற்றும் புலனாய்வு அமைப்புகளை அவமதிக்கும் ஆட்சியாக மாறியுள்ளது’ என்று மாநிலத்தில் ஆளும் பிஆா்எஸ் கட்சியின் மூத்த தலைவரும் கவிதாவின் சகோதரருமான கே.டி.ராமராவ் விமா்சித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை மேலும் கூறுகையில், ‘சகோதரிக்கு விசாரணைக்கு ஆஜராக விடுக்கப்பட்டிருப்பது அமராக்கத்துறை அழைப்பாணை அல்ல; ‘மோடி அழைப்பாணை’. எதிா்க் கட்சித்தலைவா்களை துன்புறுத்த அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. ஏன் எந்தவொரு பாஜக தலைவா்களுக்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணைகளை அனுப்பவில்லை?’ என்றாா்.

Image Caption

கவிதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.