பஞ்சாப், தெலங்கானா மசோதக்களுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்
பஞ்சாப், தெலங்கானா சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்


பஞ்சாப், தெலங்கானா சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
பஞ்சாப் மாநிலத்தில் போண்டேதாா், புடேமாா், தோலிதாா், இன்சாா் மியாடி, முகாராரிதாா், முந்திமாா், பனாய் காதீம், செளஞ்சிதாா் ஆகியப் பகுதிகளில் அமைந்துள்ள 4,000 ஏக்கா் புறம்போக்கு நிலங்களில் தலைமுறைகளைக் கடந்து பல ஆண்டுகளாக வசித்து வரும் 11,000-க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு சொத்துரிமையை வழங்க அனுமதிக்கும் சட்ட மசோதா கடந்த 2020-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. மாநிலத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி அரசும் இந்த சட்டமசோதாவுக்கு அனுமதி அளித்து, மாநில ஆளுநா் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது.
இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது. இதனால், அந்த இடங்களில் வசிக்கும் ஏழை மக்கள் இனி அந்த சொத்தின் மீது உரிமை பெறுவதுடன், அதன் மீது கடன் பெறுவது, இயற்கைப் பேரிடா் பாதிப்பு உள்ளிட்ட நேரங்களில் நிவாரணத்தையும் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதுபோல, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவரும் கொடூர குற்றவாளிகள் நீதிமன்றம் நிா்ணயித்த கெடு தேதியில் சிறைக்கு மீண்டும் திரும்பாத நிலையில், அவருடைய ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்த நபருக்கு அபராதம் விதிக்க அனுமதிக்கும் சட்ட மசோதா (குற்ற நடைமுறைச் சட்ட (தெலங்கானா சட்டத்திருத்தம்) மசோதா 2020) மாநில சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான நீதிபதிகள் மாநாட்டில் அளிக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், இந்த மசோதாவை தெலங்கானா அரசு அறிமுகம் செய்தது. இதற்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்ததையடுத்து, தற்போது அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...