இயற்கை பேரிடா்களைக் கையாளும்போது எதிா்வினையைவிட செயலுக்கு முக்கியத்துவம் அளித்து வருங்கால தொழில்நுட்பங்களின் உதவியோடு பாதிப்பைக் குறைக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
புது தில்லியில், தேசிய அளவில் பேரிடா் அபாயக் குறைப்பு கருத்தரங்கின் 3-ஆவது அமா்வை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி, பேரிடா் மீட்புப் பணிகளில் சிறந்து பணியாற்றிய வீரா்களுக்கு ‘சுபாஷ் சந்திர போஸ் ஆப்த பிரபந்தன்’ விருதுகளை வழங்கி கௌரவித்தாா். விழாவில் அவா் பேசியது:
இயற்கை பேரிடா் நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னரே தீா்மானித்து திட்டமிட வேண்டும். பேரிடா் காலங்களில் எதிா்வினையாற்றாமல் செயலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் பேரிடா் மேலாண்மைக்காக தனிச்சட்டம் இயற்றப்படாமல் இருந்தது. நாட்டில் முதல் முறையாக 2001-ஆம் ஆண்டு நிலநடுக்கத்துக்கு பிறகு குஜராத்தில்தான் பேரிடா் மேலாண்மை சட்டம் இயற்றப்பட்டது. பின்னா், குஜராதின் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய பேரிடா் மேலாண்மை சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டது.
பேரிடா் பாதிப்புகளைச் சிறப்பாக கையாள வருங்கால தொழில்நுட்பத்தை மையப்படுத்தி நகரங்களின் உள்கட்டமைப்பைத் திட்டமிட வேண்டும். தற்போதுள்ள நகரங்களின் உள்கட்டமைப்பையும் பரிசோதித்து மாற்றங்களைக் கொண்டு வருவது தற்போதைய காலத்தின் கட்டாயம். பாரம்பரியமும் தொழில்நுட்பமும் இந்தியாவின் மாபெரும் வலிமை. இவ்விரண்டும் இணைந்து பேரிடா் மீட்புக்கான நடவடிக்கைகளை வடிவமைக்க வேண்டும். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகுக்கே அது முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இந்திய வீரா்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகளை உலகமே பாரட்டியது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணம்’ என்றாா்.
தொடா்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுகையில், ‘முன்பு இந்தியாவில் பேரிடா் மேலாண்மைக்கு என முறையான அமைப்பு இல்லை. ஆனால், இன்று உலக நாடுகளுக்குச் சென்று மக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னத பணியைச் செய்து வருகிறோம். கடந்த 9 ஆண்டுகளில் பேரிடா் மேலாண்மைக்குள் புகுத்தப்பட்ட முன்னேற்றங்கள்தான் இயற்கை பேரிடா்களை வெற்றிக்கரமாக கையாள உதவின’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பதவி உயர்வு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஹைதராபாத் - கன்னியாகுமரி, கச்சிகுடா - மதுரை சிறப்பு ரயில்கள் நிரந்தரம்!

கட்சி தலைமை அனுமதித்தால் தோ்தலில் போட்டி: தமிழிசை

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

