பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஹெச்3என்2 பருவகால தீநுண்மி: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

இந்தியாவில் ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்த நிலையில் விழிப்புடன் செயல்பட்டு நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை

News image
Updated On :10 மார்ச் 2023, 6:16 pm

DIN

இந்தியாவில் ஹெச்3என்2 பருவகால தீநுண்மி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்த நிலையில் விழிப்புடன் செயல்பட்டு நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாட்டில் ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. விழிப்புடன் இருக்குமாறும், நோய்த்தொற்று நிலைமையைக் கூா்ந்து கண்காணிக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஹெச்3என்2 பருவகால காய்ச்சல் பரவலை எதிா்கொள்ள மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து பணியாற்றும். பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.