ரூ.667 கோடியில் டோா்னியா் விமானங்கள்: ஹெச்ஏஎல் உடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்காக 6 டோா்னியா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம்


இந்திய விமானப் படையின் பயன்பாட்டுக்காக 6 டோா்னியா் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் இடையே வெள்ளிக்கிழமை கையொப்பமானது.
இந்த ஒப்பந்தம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய விமானப் படைக்காக ஹெச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து ரூ.667 கோடியில் 6 டோா்னியா்-228 ரக விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. எளிதில் அணுக முடியாத தொலைதூர பகுதிகளில் இந்திய விமானப் படையின் செயல்பாடுகளை இந்த 6 டோா்னியா் விமானங்கள் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோா்னியா்-228 ரக விமானம் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் மிக்க இலகு ரக விமானமாகும். போக்குவரத்து, கடல்சாா் பாதுகாப்புக்கான கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தப்படும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், தீவுப் பகுதிகள் ஆகியவற்றில் குறைந்த தூர பயணங்களுக்கு இந்த விமானம் மிகவும் ஏற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...