ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நடுவானில் பயணி உயிரிழப்பு! தில்லி விமானம் பாகிஸ்தானில் அவசர தரையிறக்கம்

தில்லியிலிருந்து சென்ற விமானத்தின் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
இண்டிகோ(கோப்புப்படம்)
Updated On :13 மார்ச் 2023, 6:46 am

DIN

தில்லியிலிருந்து சென்ற விமானத்தின் பயணி ஒருவர் நடுவானில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் இருந்து இன்று காலை கதார் நாட்டின் டோஹா நகருக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த நைஜீரியா நாட்டின் அப்துல்லா(60) என்பவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து கராச்சி விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கோரினார்.

உடனடியாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் மயங்கிய பயணியை பரிசோதித்த மருத்துவக் குழுவினர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிற பயணிகள் டோஹா செல்வதற்கான ஏற்பாடுகளை விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து இண்டிகோ நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.