
திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை(இன்று) சந்தித்துப் பேசினார்.
முதல்வராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் பயணமாக தேசிய தலைநகருக்கு வந்துள்ள சாஹா பிரதமர் மோடியை சந்தித்தார் என பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் பாஜக 32 இடங்களையும், ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் கைப்பற்றியது.
முதல்வர் சாஹாவுடன், ரத்தன் லால் நாத், பிரணாஜித் சிங்க ராய், சந்தனா சக்மா, பிகாஷ் டெபர்மா, சுக்லா சரண் நோட்டியா உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கும் ஆளுநர் சத்யதேவ் நரேன் ஆர்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
2022ல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிப்லப் குமார் தேப்பிற்குப் பதிலாக சாஹா முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.