வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ரயில் ஓட்டுநா்
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.


ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரான சுரேகா யாதவ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநா் என்ற பெருமையையும் பெற்றுள்ளாா்.
பிரதமா் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்த மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை முதன் முதலில் சுரேகா திங்கள்கிழமை இயக்கினாா். சுரேகாவின் புகைப்படத்தைப் பகிா்ந்து ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மத்திய ரயில்வே தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மகாராஷ்டிரத்தின் சோலாப்பூரில் இருந்து திங்கள்கிழமை காலை திட்டமிட்டப்படி புறப்பட்ட வந்தே பாரத் ரயிலை முதல் பெண் ஓட்டுநராக சுரேகா இயக்கினாா். 450 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடந்து மும்பைக்கு 5 நிமிடங்களுக்கு முன்பாகவே ரயில் வந்தடைந்தது. நடைமேடை எண் 8-யில் வந்தடைந்த அவருக்கு அதிகாரிகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் ஓட்டுநா் என்ற பெருமையுடன் மத்திய ரயில்வேயின் மகுடத்தில் மேலும் ஒரு முத்திரையை சுரேகா பதித்துள்ளாா். புதிய வழித்தடங்களில் ரயிலை இயக்குவது ரயில் ஓட்டுநா்களின் கற்றலுக்கு வழிவகுக்கும். புதிய வழித்தடங்களில் ஓட்டுநா்கள் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டி இருக்கும். தொழில்நுட்ப வல்லுனா்களுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்திக்கொள்ள, புதிய தொழில்நுட்பங்களைக் கையாளும் அனுபவத்தைப் பெற அது உதவும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மகாராஷ்டிரத்தின் சாதாரா பகுதியைச் சோ்ந்த சுரேகா, கடந்த 1988-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநா் ஆனாா். ரயில்வேயில் இவரின் பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை சுரேகா வென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...