இணைய விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடா? மத்திய அரசு விளக்கம்

இணைய விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். 
இணைய விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடா? மத்திய அரசு விளக்கம்
இணைய விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடா? மத்திய அரசு விளக்கம்

இணைய விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார். 

முன்பு இல்லாத அளவு இணைய விளையாட்டுகளின் எண்ணிக்கையும், அதனை விளையாடும் பயனர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் விஷ்ணு தத் சர்மா, இணைய விளையாட்டுகளின் பயன்பாட்டு நேரத்தைக் குறைப்பது தொடர்பான திட்டம் ஏதாவது இருக்கிறதா என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இணைய விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து மத்திய அரசு விழிப்புணர்வுடன் இருக்கிறது. இணைய பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த மத்திய அரசு கொள்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்தார். 

மேலும் அவர் இணைய விளையாட்டுகளை குறிப்பிட்ட கால அளவு மட்டுமே விளையாடும் வகையில் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com