முசாஃபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்து வரும் என்கவுண்டர் சம்பவங்களால், மன்னித்துவிடுங்கள், தவறு செய்துவிட்டேன் என்ற பதாகையுடன் பைக் திருடன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அங்குர் என்ற அந்த பைக் திருட்டுக் கும்பலின் தலைவன், என்னை மன்னித்துவிடுங்கள் முதல்வர் யோகி, தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று ஹிந்தியில் எழுதிய பதாகையை கையில் ஏந்தியபடி காவல்நிலையம் வந்துள்ளார்.
தனது கிராமத் தலைவர், குடும்ப உறுப்பினர்கள் புடைசூழ, காவல்நிலையத்துக்கு வந்த அங்குர், காவல்துறையினரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு, இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில குற்றவாளிகள் மீது காவல்துறையினர் என்கவுண்டர் செய்த சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், உயிருக்குப் பயந்து, பைக் திருடன் காவல்நிலையத்தில் சரணடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


