குருகிராம்: வெளிநாட்டு இ-சிகரெட் விற்பனை செய்த நபர் கைது

குருகிராமில் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக 50 வயது நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

குருகிராம்: குருகிராமில் ரூ.7 முதல் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததாக 50 வயது நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

முதல்வர் பறக்கும் படை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு இன்று குருகிராமில் உள்ள வியாபர் கேந்திரா, சுஷாந்த் லோக் பேஸ் -1ல் அமைந்துள்ள கடை எண் 89, ஜெயின் சுபாரியில் சோதனை நடத்தியது.

குற்றம் சாட்டப்பட்டவர் தில்லி கான்பூரைச் சேர்ந்த ராஜேஷ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு பிராண்டுகளின் இ-சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக முதல்வரின் பறக்கும் படை அதிகாரி ஹரீஷ் கூறியதாவது: 

அனுமதியின்றி சட்டவிரோதமாக இ-சிகரெட் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, நாங்கள் சம்பவ இடத்தை சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பொருட்களுடன் குற்றவாளியை கைது செய்தோம்.

இவர், தில்லியிலிருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை வாங்கி, கடந்த ஆறு மாதங்களாக சட்ட விரோதமாக வியாபாரம் செய்து, கடைக்கு மாத வாடகையாக, 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்திருக்கிறார்.

குருகிராமில் உள்ள சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் அவர் மீது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டம் மற்றும் எலக்ட்ரானிக் சிகரெட் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com