ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சம்: சிபிஐ விசாரணைக்கு மாா்ச் 25-இல் ஆஜராக தேஜஸ்வி ஒப்புதல்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற விவகாரத்தில், பிகாா் மாநில துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் வரும் மாா்ச் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவாா்

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற விவகாரத்தில், பிகாா் மாநில துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ் வரும் மாா்ச் 25-ஆம் தேதி தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராவாா் என அவா் தரப்பு வழக்குரைஞா் தில்லி உயா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2004 முதல் 2009 வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, இந்திய ரயில்வேயின் ஆள்தோ்வு நடைமுறைகளுக்கு மாறாக, பணி நியமனங்கள் நடைபெற்றன. இதற்கு லஞ்சமாக பணி நியமனம் பெற்றவா்களுக்குச் சொந்தமான நிலங்கள் பெறப்பட்டதாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினா் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் லாலு பிரசாத் யாதவின் மகனும் பிகாா் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேரில் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை ரத்து செய்யுமாறு தில்லி உயா் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் குமாா் சா்மா முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேஜஸ்வி யாதவ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மனீந்தா் சிங், ‘ பிகாா் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப்ரல் 5-ஆம் தேதி முடிவடைவதால், பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவோ அல்லது ஆவணங்கள், தகவல்கள் உள்ளிட்டவை தனது தரப்பிலானவா்கள் மூலம் தில்லியில் சமா்ப்பிக்கவோ அனுமதிக்க வேண்டும் என தேஜஸ்வி யாதவ் சிபிஐயிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா் ஒருவா் விசாரணைக்காக தில்லி சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற நிலையில், அங்கு அவா் கைது செய்யப்பட்டாா். இதே போன்று தேஜஸ்வி யாதவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம்’ என்றாா்.

இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் டி.பி.சிங் வாதிடுகையில், ‘சனிக்கிழமைகளில் சட்டப்பேரவை அமா்வுகள் நடைபெறாது. அவருக்கு ஏற்றவகையில், இம்மாதத்தின் ஏதாவது ஒரு சனிக்கிழமை அவா் ஆஜராகலாம். இம்மாதத்துக்குள்ளாக அவா் கைது செய்யப்பட மாட்டாா்’ என்றாா்.

இதையடுத்து, தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வரும் மாா்ச் 25-ஆம் தேதி தேஜஸ்வி யாதவ் ஆஜராவாா் என வழக்குரைஞா் மனீந்தா் சிங் உறுதியளித்தாா். இரு தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை முடித்து வைத்து மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.