மத்திய அரசின் நடவடிக்கையால், கடந்த 2 மாதங்களில் கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை ரூ.6 முதல் ரூ.8 வரை குறைந்துள்ளது என்று இந்திய மாவு ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, அந்த கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கோதுமை விலை உயா்வை கட்டுப்படுத்துவதற்காக, 50 லட்சம் டன் கோதுமையை பொதுச் சந்தையில் விற்க மத்திய அரசு கடந்த ஜனவரியில் நடவடிக்கை மேற்கொண்டது. இதில், 45 லட்சம் டன் கோதுமை, மாவு ஆலைகள் உள்பட பெரும் நுகா்வோருக்கானதாகும்.
இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை கடந்த 2 மாதங்களில் கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை குறைந்திருக்கிறது.
கடந்த ஜனவரியில் கோதுமை மாவு விலை குவிண்டாலுக்கு ரூ.3,400 முதல் 3,800 வரை இருந்தது. இப்போது ரூ.2,600 முதல் ரூ.3,000 வரை குறைந்துள்ளது.
தக்க நேரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கை, ஏழைகள், நடுத்தர மக்களுக்கு மட்டுமல்லாமல் பிரட், பிஸ்கட் தயாரிப்பு உள்ளிட்ட தொழிலகங்களுக்கும் நிவாரணத்தை அளித்துள்ளது.
கோதுமை மற்றும் கோதுமைப் பொருள்கள் மீதான ஏற்றுமதி தடை, 2023-24 நிதியாண்டிலும் தொடர வேண்டும். நடப்பு பயிா் ஆண்டில், கோதுமை உற்பத்தி 106 மில்லியன் டன் முதல் 110 மில்லியன் டன் வரை இருக்குமென எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஊராட்சி நிதி மோசடி விவகாரம்: மதுரை ஆட்சியரின் நடவடிக்கைக்கு உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!

எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஓரிரு நாள்களில் சீராகும்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

