ராகுல் காந்தி அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, குஜராத் மாநிலம், சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பளித்தது.
இதையடுத்து, எம்.பி. பதவியை இழந்த ராகுல் காந்தி, விசாரணை நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக சூரத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த இத்தீா்ப்புக்கு தடை விதிக்க அவா் கோரியிருந்தாா். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமா்வு நீதிமன்றம், தீா்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதைத் தொடா்ந்து, மாநில உயா் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்றைய விசாரணையில் ராகுல் காந்தியின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
மே 6 முதல் நீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 5 ஆம் தேதி வழக்குகள் விசாரணை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ராகுல் வழக்கில் ஜூன் 5 க்குப் பிறகே தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி

சரியான வணிகம் இல்லை! அஜித் படத்திலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

”இந்தியாவின் எண்ணெய் கொள்முதலில் அமெரிக்கா தலையிடும், தண்டிக்கும்!” ராகுல் பதிவு!

கதாபாத்திர தேர்வில் அசத்தும் ரேச்சல் ரெபெக்கா!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

