மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தில்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி

தில்லிப் பல்கலைக் கழகத்தில்  விடுதியில் தங்கியுள்ள முதுநிலை மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.

கோப்புப்படம்

Published On :

தில்லிப் பல்கலைக் கழகத்தில்  விடுதியில் தங்கியுள்ள முதுநிலை மாணவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இன்று பேசியுள்ளார்.

வெள்ளை டி-சர்ட் அணிந்து மாணவர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இந்த உரையாடலின்போது மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், அவர்களது கல்வியில் அடுத்து என்ன செய்யலாம் என திட்டம் வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கடந்த மாதம் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும், ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களிடையேயும் முகர்ஜி நகர் பகுதியில் ராகுல் காந்தி பேசியிருந்தார். 

முகர்ஜி நகர் பகுதியில் சாலையோரத்தில் நாற்காலியில் அமர்ந்து மாணவர்களிடம் ராகுல் காந்தி, அவர்களது அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.