கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

தாயாகிறாரா நடிகை சமந்தா?

நடிகை சமந்தா குறித்து...

News image

நடிகை சமந்தா தன் கணவருடன்.

Updated On :21 ஜூன் 2026, 1:30 pm IST

நடிகை சமந்தாவின் புதிய விடியோவில் அவர் தாயாகப் போவதாகத் தெரிய வந்துள்ளது.

தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. பல வெற்றிப்படங்களில் நடித்தவர் பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்தியளவில் கவனிக்கப்பட்டார்.

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது, மா இண்டி பங்காரம் என்கிற இவர் நடித்த ஆக்‌ஷன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. தமிழில் எங்கள் தங்கம் எனப் பெயரிட்ட இப்படத்தின் புரமோஷனுக்கு சென்னை வந்தவர் முதல்வர் விஜய்யைச் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் சமந்தா கேக் வெட்டினார். இந்த விடியோவில் அவர் கர்ப்பமாக இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. உடலைக் கச்சிதமாக வைத்திருக்கும் சமந்தாவிற்கு, தாயாகவுள்ள தோற்றம் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A new video of actress Samantha suggests that she might be pregnant.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.