பிகார் மாநிலம் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் கிடந்த ரூ.2000, ரூ.500 நோட்டுகளை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் சென்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
பிகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ரோஹ்தாஸ் மாவட்டத்தின் மொராபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் ரூ.200, ரூ.500 நோட்டுகள் மிதந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கழிவுநீர் வாய்க்காலில் பணம் கொட்டிக்கிடக்கும் தகவல் அந்த கிராம மக்களிடையே தீயாக பரவியது.
இதையடுத்து, கழிவுநீர் வாய்க்காலில் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்கு ஏராளமானோர் அங்கு குவிந்தனர். கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் கழிவுநீர் வாய்க்காலில் இறங்கி ரூ.2000, ரூ.500, ரூ.100, ரூ.10 என பல்வேறு மதிப்புள்ள நோட்டுகளை அள்ளிச் சென்றனர். அந்த நோட்டுகள் உண்மையானவை என கிராம மக்கள். இது குறித்த விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மையை கண்டறியலாம், கழிவுநீர் வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் சந்தையில் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளது குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கள்ள நோட்டுகள் ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது, சமீப காலமாக கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகளை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையாகவும், சந்தேகத்திற்கு இடமான செயல்கள் ஏதேனும் நடைபெற்றால் அதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி பலமுறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளையராஜா இசைக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி குரல்!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 2 2026) 12 ராசிகளுக்கும்! வெற்றி யாருக்கு?

பதவி உயர்வு யாருக்கு? இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 02)

பருவமழையை எதிா்கொள்ள மின்வாரியத்தில் கூடுதல் பணியாளா்களை நியமிக்க அனுமதி
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



