மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செல்ஃபி எடு.. ஓட்டுப் போடு.. கர்நாடகத் தேர்தலில் அறிமுகம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விறுவிறுப்பான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

News image

செல்ஃபி எடு.. ஓட்டுப் போடு.. கர்நாடகத் தேர்தலில் அறிமுகம்

Updated On :9 மே 2023, 7:03 am


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விறுவிறுப்பான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பெங்களூருவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், வாக்காளரின் முகத்தை அடையாளம் காணும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. அதாவது, பெங்களூருவில் அரண்மனை சாலையில் அமைந்துள்ள ராம்நாராயண் செல்லாராம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் அறை எண் இரண்டடில் மட்டும் இந்த வசதி செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள், தங்களது செல்லிடைபேசியில் தேர்தல் ஆணையத்தின் சுனாவ்னா என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) எண்ணை, செல்லிடைபேசி எண்ணை பதிவிட்டு, ஒடிபியை உள்ளீட வேண்டும். இந்த செயலியில், வாக்காளர் தனது செல்ஃபியை எடுத்து பதிவேற்ற வேண்டும். பிறகு வாக்காளர் வாக்குச்சாவடியை அடைந்ததும், அங்கிருக்கும் முகத்தை அடையாளம் காணும் கருவி மூலம் வாக்காளரின் அடையாளம் உறுதி செய்யப்படும். அவர் அளித்த செல்ஃபியுடன், தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் புகைப்படம் ஒத்துப்போனால், அந்த வாக்காளர் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் வாக்களிக்கலாம். 

இந்த வசதி மூலம், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், கள்ள ஓட்டுப் போடுவது, மோசடி செய்வது என்பது இருக்காது என்றும் தேர்தல் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

கர்நாடகத்தில் மே 10ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் ஆளும் பாஜக, காங்கிரஸ், மஜத இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.