கர்நாடக பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
224 உறுப்பினா்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 65.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 13 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன.
தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 263 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 1,65,389 போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் 3.5 லட்சம் அரசு ஊழியா்கள் தோ்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. மொத்தம் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இதில் ஆண் வேட்பாளா்கள் 2430, பெண் வேட்பாளா்கள் 184 போ் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் ஆர்பிஐ அதிரடி! மறைமுக வட்டி, அபராதங்களுக்கு செக்!

பால் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கரூா் மாவட்ட ஆட்சியா்

ஈரான் புதிய தலைவர் பற்றிய தகவலுக்கு ரூ. 92 கோடி சன்மானம்! அமெரிக்கா
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

