ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

மும்பையின் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம் ஒரு புதிய அத்தியாயம்

மும்பையில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கும் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக மாறுகிறது. 

News image
Updated On :10 மே 2023, 6:23 am

DIN


மும்பையில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கும் சுரங்க மெட்ரோ ரயில் திட்டம், இந்தியாவின் மிக நீண்ட மற்றும் புதிய அத்தியாயத்தின் துவக்கமாக மாறுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொலாபா - ஆரே இடையே நடைபெற்று வருகிறது. இந்தியாவிலேயே மிக நீண்ட தொலைவுக்கு சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் திட்டத்தை வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடித்து, சோதனை ஓட்டத்தை நடத்தும் நோக்கத்தோடு, பொறியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், தொழிலாளர்கள், திட்ட வடிவமைப்பாளர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

பாதுகாப்பு நடைமுறைகள் கவனத்துடன் பின்பற்றப்பட்டு, முதல் கட்டப் பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டு, டிசம்பரில் ரயில்களை இயக்கிப் பார்க்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மும்பை மெட்ரோ ரயில் கழகத்துக்கு, மும்பையில் நடந்து வரும் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியை செய்து முடிப்பது என்பது மிகவும் பெருமைமிகு பணியாகக் கருதப்படுகிறது. இதுதான், மும்பையின் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் ஒரே மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கும்.

பாந்த்ரா குர்லா வளாகம் - ஆரே இடையேயான முதல் கட்டப் பணிகளை டிசம்பர் அல்லது அதையடுத்து மூன்று மாதங்களுக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டம், ஆரே காலனியில் தொடங்கி சாஹர் சாலை வழியாக, வித்யாநகரி, பாந்த்ரா குர்லா வளாகம் வரை 12.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு 11 ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும். இதில், சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் என இரண்டு ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 110 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பயண நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.