மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: மம்தா பானர்ஜி

மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, நிலைமையைக் கையாள மாநில அரசு தயாராக உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: மம்தா பானர்ஜி

மோக்கா புயல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, நிலைமையைக் கையாள மாநில அரசு தயாராக உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மேலும், வங்கதேசத்திற்கும் மியான்மருக்கும் இடையே புயல் நகரும்போது சூழ்நிலைகள் மாறினால் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

முன்னதாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்றது.

வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றுள்ளது.

தொடர்ந்து இன்று நள்ளிரவில் அதிதீவிர புயலாக தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு - வட கிழக்கு திசையில் நகர்ந்து சனிக்கிழமை சற்று வலுவிழந்து ஞாயிற்றுக்கிழமை (மே 14) காலை தென்கிழக்கு மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு 'மோக்கா' என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com