ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

டி.கே.சிவக்குமார், சித்தராமையா மட்டுமின்றி இவர்களும் முதல்வர் பதவிக்கு ஆர்வமாக உள்ளனர்: ராமலிங்க ரெட்டி

டி.கே.சிவக்குமார், சித்தராமையா மட்டுமின்றி எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரும் முதல்வர் பதவி மீது ஆர்வமாக உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :14 மே 2023, 6:24 am

DIN

டி.கே.சிவக்குமார், சித்தராமையா மட்டுமின்றி எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரும் முதல்வர் பதவி மீது ஆர்வமாக உள்ளதாக கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு கட்சியிலும் லட்சியங்கள் இருக்கும். டி.கே.சிவக்குமார், சித்தராமையா மட்டுமின்றி எம்.பி.பாட்டீல், ஜி.பரமேஸ்வரா ஆகியோரும் ஆர்வமாக உள்ளனர். ஒருவர் மட்டுமே முதல்வர் ஆக முடியும். கட்சியின் உயர்நிலைக் குழு மற்றும் எம்எல்ஏக்கள் அதை முடிவு செய்வார்கள். நான் அமைச்சர் பதவி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 224 தொகுதிகளில் 136 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸுக்கு 136 இடங்கள் கிடைத்துள்ளன. 
இதைத் தொடா்ந்து, ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. முதல்வா் பதவிக்கு எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.