பணமதிப்பிழப்பின் முட்டாள்தனமான முடிவை மறைக்கவே ரூ.2,000 நோட்டு வாபஸ்: ப.சிதம்பரம் தாக்கு

எதிர்பார்த்தது போலவே, அரசாங்கம், ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்


புதுதில்லி: ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து, எதிர்பார்த்தது போலவே, அரசாங்கம், ஆர்பிஐ ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் விமரிசனம் செய்துள்ளார்.

நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் இருந்து வரும் ரூ.2,000 நோட்டை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23 ஆம் தேதி முதல் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம். மேலும், ரூ.2,000 நோட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் பலவும் விமரிசித்து வருகின்றன. 

இந்நிலையில், பணமதிப்பிழப்பின் முட்டாள்தனமான முடிவை மறைக்கவே ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரூ.1,000 நோட்டு புழக்கத்திற்கு கொண்டு வந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமரிசித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்க பதிவில், நாங்கள் எதிர்பார்த்ததைப் போல அரசு, ஆர்பிஐ ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றுள்ளது. ரூ.2000 நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்திற்கான சரியான தொகை அல்ல. இதை நாங்கள் 2016 நவம்பரிலே சொன்னோம், தற்போது நாங்கள் சொன்னது சரி என்று நிரூபித்துள்ளார்கள். அதிக அளவில் பரிமாற்றத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்கவே ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது” என்றார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சில வாரங்களுக்குப் பிறகு, அரசும், ரிசர்வ் வங்கியும் மீண்டும் ரூ.500 மற்றும் ரூ.1,000 அறிமுகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த அழுத்தம் இருப்பதாக சிதம்பரம் கூறினார்.

ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது மொத்தத்தில் பணமதிப்பிழப்பு சாதாரண மக்களுக்கு எதிரானது என்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக மீண்டும் ரூ1,000 நோட்டை அறிமுகப்படுத்தப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். ரூ.2,000 நோட்டுகள் ஒருபோதும் சுத்தமான நோட்டாக இருந்ததில்லை. இது பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தங்கள் கறுப்புப் பணத்தை, தற்காலிகமாக வைத்திருப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முழு வட்டத்திற்கு வந்துவிட்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com