கர்நாடகத்தில் மக்களுக்காக காங்கிரஸ் பாடுபடும்: சச்சின் பைலட்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக உழைத்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று அக்கட்சியின் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஜெய்ப்பூரில் இன்று ஏஎன்ஏ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கர்நாடகத்தில் நல்ல பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைத்துள்ளோம். அங்கு பாஜக ஊழல் கட்சி என்று காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது.
அதனை மக்கள் ஒப்புக்கொண்டதன் விளைவாக, நாங்கள் மாநிலத்தில் ஆட்சி அமைத்தோம். நாங்கள் மக்களுக்காக வேலை செய்வததோடு மட்டுமல்லாமல் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் என்று நான் நம்புகிறேன்.
மேலும், 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பாஜக தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியும் என்று கூறியது. ஆனால், கருப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

