அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதே தங்களின் அடுத்த இலக்கு என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கட்சி தொண்டர்களிடம் இன்று பேசிய அவர், "சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களுக்கு 135 இடங்கள் கிடைத்தன, ஆனால் நான் மகிழ்ச்சியடையவில்லை. எங்கள் அடுத்த இலக்கு மக்களவைத் தேர்தல், நாம் நன்றாக போராட வேண்டும். இவ்வறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக, பெங்களூருவில் உள்ள கேபிசிசி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளையொட்டி கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி பயங்கரவாதம் பற்றி பேசுகிறார். பாஜகவைச் சேர்ந்த யாரும் பயங்கரவாதத்தால் உயிரிழக்கவில்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறோம் என்று பாஜக தொடர்ந்து சொல்கிறது. ஆனால் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற பல காங்கிரஸ் தலைவர்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்று அவர் கூறினார். கா்நாடகத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சித்தராமையா சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அமைச்சா்கள் 8 பேரும் பதவியேற்றுக் கொண்டனா். மே 10-ஆம் தேதி நடைபெற்ற கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக சித்தராமையா, துணைத் தலைவராக டி.கே.சிவகுமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதையடுத்து, புதிய ஆட்சி அமைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.