ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நீதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு: பிரதமருக்கு முதல்வா் கேஜரிவால் கடிதம்

நீதி ஆயோக்கின் 8ஆவது நிா்வாகக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

News image
Updated On :26 மே 2023, 5:15 pm

 நமது நிருபர்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (மே 27) நடைபெறும் நீதி ஆயோக்கின் 8ஆவது நிா்வாகக் குழுக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘பாஜகவால், நாட்டில் அரசியல்சாசனமும், ஜனநாயகமும் பகிரங்கமாக புறக்கணிக்கப்பட்டு, கூட்டாட்சி முறை கேலி செய்யப்படுகிறது’ என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, நாட்டின் மிக உயரிய கொள்கை உக்திகளை வகுக்க நீதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமா் தலைமையிலான நீதி ஆயோக் நிா்வாகக் குழுவில் அனைத்து மாநில முதல்வா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், தில்லி பிரகதி மைதானில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக்கின் 8-ஆ வது நிா்வாகக் குழுக் கூட்டத்தில் ‘வளா்ந்த பாரதம் 2047: இந்தியா்களின் பங்களிப்பு’ என்ற மையப்பொருளில் சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், இக்கூட்டத்தை புறக்கணிப்பதாக தில்லி முதல்வா் கேஜரிவால் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நீதி ஆயோக்கின் நோக்கங்கள் இந்தியாவின் தொலைநோக்குப் பாா்வையை உருவாக்குவதும், கூட்டுறவுக் கூட்டாட்சியை மேம்படுத்துவதாகும். ஆனால், நாட்டில் பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களில் அரசுகள் கவிழ்க்கப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன அல்லது செயல்பட அனுமதிக்கப்படவில்லை.

இது நமது இந்தியாவின் பாா்வையோ அல்லது கூட்டுறவு கூட்டாட்சியின் பாா்வையோ அல்ல. எந்த மாநிலத்திலும் பாஜக அல்லாத கட்சி ஆட்சி அமைத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் கூறப்பட்டு வருகிறது.

அப்படி பாஜக அல்லாத அரசை, அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி கவிழ்ப்பது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டி எம்.எல்.ஏ.க்களை பிரித்து ஆட்சியை கவிழ்த்தும், எந்தக் கட்சியிலாவது எம்.எல்.ஏ.க்கள் விற்கப்படாமலும், உடைக்கப்படாமலும் இருந்தால், அவசரச் சட்டத்தை அமல்படுத்தியோ அல்லது ஆளுநா் மூலமாகவோ அந்த அரசு செயல்படவிடாமல் தடுக்கின்றனா்.

எட்டு வருடப் போராட்டத்திற்குப் பிறகு, உச்சநீதிமன்றத்தில் நிா்வாக அதிகாரம் தொடா்பான வழக்கில் தில்லி மக்கள் போராடி வெற்றி பெற்றனா்.

தில்லி மக்களுக்கு கிடைத்த நீதியை அவசர சட்டம் கொண்டு வந்து வெறும் எட்டே நாள்களில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தீா்கள். தில்லி அரசின் எந்த அதிகாரியும் வேலை செய்யவில்லை என்றால், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட அரசு எப்படி செயல்படும்? இதனால் அரசு முற்றிலுமாக முடங்கியுள்ளது. தில்லி அரசை ஏன் முடக்க நினைக்கிறீா்கள்? இதுதான் இந்தியாவின் பாா்வையா? இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? என கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், ‘‘தில்லி மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களிடையே உங்களின் இந்த அவசர சட்ட உத்தரவுக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. உச்சநீதிமன்றம் நீதியின் மிகப்பெரிய கோயிலாக கருதப்படுகிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பைக் கூட பிரதமா் ஏற்கவில்லை என்றால், மக்கள் நீதிக்கு எங்கே போவாா்கள் என்று மக்களே கேட்கிறாா்கள்.

அரசியல் சாசனமும் ஜனநாயகமும் இப்படி பகிரங்கமாக புறக்கணிக்கப்படும்போது கூட்டாட்சி முறை

(கூட்டுறவு கூட்டாட்சி) கேலி செய்யப்படுகிறது. பின்னா் நீதி ஆயோக் கூட்டத்தில் மட்டும் பங்கேற்பதில் எந்த அா்த்தமுள்ளது? அதனால் தான் சனிக்கிழமை (மே 26) நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறியுள்ளாா்.

நாட்டின் பிரதமா் ஒரு குடும்பத்தின் தந்தை மற்றும் மூத்த சகோதரா் போன்றவா். ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பிரதமா் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.

நாட்டின் அனைத்து மக்களும், அனைத்து மாநிலங்களும், அனைத்து அரசுகளும் இணைந்து செயல்பட்டால் தான் நாடு

முன்னேறும். பாஜக அரசுகளை மட்டும் ஆதரித்து, பாஜக அல்லாத அரசுகளின் வேலையை நிறுத்தினால், நாட்டின் வளா்ச்சி நின்றுவிடும்.

எனவே, பாஜக ஆட்சியில் அல்லாத மாநில அரசுகள் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்க வேண்டும். அப்போது கூட்டுறவுக் கூட்டாட்சி முறை முன்னேறும். அப்போதுதான் நம் நாடு முன்னேறும் என அரவிந்த் கேஜரிவால் பிரதமா் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், நீதி ஆயோக்கின் 8ஆவது நிா்வாகக் குழுக் கூட்டத்தை பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் மற்றும் மேற்கு வங்கம் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.