ஹுருன் இந்தியா நிறுவனம் 2022 - 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
இதில், ரூ.2042 கோடியை அளித்து நாட்டில் அதிக நன்கொடை அளித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார். நிதியாண்டு கணக்கிற்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடியை நன்கொடையாக அளித்திருக்கிறார்.
இதையும் படிக்க: ரிசர்வ் வங்கி வாசலில் 2,000 ரூபாயை மாற்ற நீண்ட வரிசையா?
இரண்டாம் இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1,774 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர். முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் ரூ.336 கோடி அளித்து மூன்றாம் இடத்தில் உள்ளனர். குமார் மங்களம் பிர்லா & குடும்பத்தினர் ரூ.287 கோடி, கௌதம் அதானி ரூ.285 கோடியுடன் நான்காம் மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளனர். ஆச்சரியமாக, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் நான்கு பேர் அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் உள்ளனர். பட்டியலில் வழக்கமாக இடம்பெறும் நன்கொடையாளர்களைத் தவிர புதிதாக 25 பேர் இணைந்துள்ளனர்.
இதில், பெரும்பாலானவர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காகவே நன்கொடைகளை அளித்துள்ளனர். ஆனால், ஷிவ் நாடார் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களுங்காக நன்கொடை செய்திருக்கிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு

கல்வி பெறும் உரிமையில் பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமை இடம்பெறாது: தில்லி உயா்நீதிமன்றம்

கட்டுமானப் பொருள்கள் விலை குறைக்கப்படும்: ஆா். காமராஜ் வாக்குறுதி
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

