தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித் துறைதான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் எப்போது வந்தாலும் பாஜகவின் முக்கிய ஆயுதம் அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறைதான் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். 
தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித் துறைதான்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தேர்தல் எப்போது வந்தாலும் பாஜகவின் முக்கிய ஆயுதம் அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறைதான் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார். 

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எப்போது தேர்தல் வந்தாலும் பாஜகவின் முக்கிய ஆயுதம் அமலாக்கத் துறை அல்லது வருமானவரித் துறைதான். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலிலே இதை நாங்கள் பார்த்தோம். தேர்தல் நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தினார்கள். 

இப்போது மிசோரம் உள்பட 5 மாநிலங்களிலும் மக்களின் மனநிலை மிகத் தெளிவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி நன்மதிப்பைப் பெற்றுள்ளது. மாநிலங்களின் பல்வேறு திட்டங்கள் சாமானிய மக்களைச் சென்றடைந்துள்ளன. 

ஆனால் பாஜகவினரின் இப்போதைய ஒரே இலக்கு சத்தீஸ்கர் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு இருப்பதால் தேர்தல் ஒருதலைப்பட்சமாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, சத்தீஸ்கர் முதல்வர் மீது குற்றம்சாட்டி சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

துபாயில் இருந்து செயல்படும் மகாதேவ் செயலிக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? எது அவர்களைத் தடுக்கிறது?

ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரின் வீட்டு வாசலிலும் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பு இருக்கிறது. இதற்கெல்லாம் சத்தீஸ்கர் மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்' என்று பேசியுள்ளார். 

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு நவ. 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளா்களிடம் இருந்து மாநில முதல்வா் பூபேஷ் பகேலுக்கு ரூ.508 கோடி கைமாறியிருப்பதாக கூறியுள்ள அமலாக்கத் துறை, இது தொடா்பாக விசாரித்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com