காற்று மாசு: தில்லியில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு; பள்ளிகளுக்கு விடுமுறை

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வருகிற நவ. 13 முதல் நவ. 20 ஆம் தேதி வரை வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 
காற்று மாசினால் புகை சூழ்ந்த நிலையில் தாஜ்மஹால்.
காற்று மாசினால் புகை சூழ்ந்த நிலையில் தாஜ்மஹால்.

தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வருகிற நவ. 13 முதல் நவ. 20 ஆம் தேதி வரை அங்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

தில்லியில் காற்று மாசு கடந்த சில தினங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து காற்று மாசைக் குறைக்க தில்லி அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தில்லியில் இன்று(திங்கள்கிழமை) முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

அதன்படி, தில்லியில் வருகிற நவம்பர் 13 முதல் 20 ஆம் தேதி வரை பதிவெண்கள் அடிப்படையில் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. 

காரின் ஒற்றை பதிவெண்கள், இரட்டை பதிவெண்கள் என்ற முறையில் கார்கள் இயங்க அனுமதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். அதாவது காரின் கடைசி இலக்க எண் ஒற்றை எண் கொண்ட கார்கள் ஒருநாளும், இரட்டை எண் கொண்ட கார்கள் மற்றொரு நாளும் அனுமதிக்கப்படும். 

மேலும், தில்லியில் கட்டடப் பணிகள் எதுவும் நடக்க இப்போது அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார். 

அதுபோல 10, 12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாறாக, அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

காற்று மாசு தொடர்பான இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி 'கடுமையான பிரிவில்' உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com