தில்லி காற்று மாசுபாடு: நீதிமன்ற அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆம் ஆத்மி அரசு ஆலோசனைக் கூட்டம்

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறது ஆம் ஆத்மி அரசு.
தில்லி காற்று மாசுபாடு: நீதிமன்ற அறிவுறுத்தலைப் பின்பற்றி ஆம் ஆத்மி அரசு ஆலோசனைக் கூட்டம்

காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசு புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. 

சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று (நவம்.7) வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற அனைத்து துறைகளின் கூட்டத்திற்கு தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமை தாங்கினார். போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி ஆகியோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய், “தில்லியில் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதுகுறித்து விவாதித்து நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துகிறோம். நீதிமன்றம் அறிவுறுத்தியபடி செயல்படுவோம்” என்று தெரிவித்தார். 

முன்னதாக, தில்லி - என்.சி.ஆா். பகுதிகளில் அதிகரித்துள்ள காற்று மாசுபாடு தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பயிா்க் கழிவுகளை எரித்தல், வாகன மாசுபாடு மற்றும் திறந்த வெளியில் கழிவுகளை எரித்தல் போன்ற பிரச்னைகளுக்குத் தீா்வு காண உத்தரவிட்டது.

காற்றின் தரம் குறித்து செவ்வாயன்று மிகுந்த கவலை தெரிவித்ததுடன், பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய பங்காற்றுவதில் இதுவும் ஒன்று என்று கூறி விவசாயிகள் உடனடியாக கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறியது.

மேலும், முந்தைய உத்தரவின்படி நிறுவப்பட்ட ஸ்மோக் டவர்கள் வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அவை சரிசெய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

மாசு பிரச்னை குறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரடியாகவோ அல்லது காணொளி மூலமாகவோ கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com