
ஆள் கடத்தல் விவகாரம் தொடர்பாக 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா – வங்கதேச எல்லை வழியாக ஆள்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஆள்களை கடத்தி வடமாநிலத்தவர் போல் வேலை பார்க்க வைப்பதாகப் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகம், தெலங்கானா, ஹரியாணா, ராஜஸ்தானில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
சென்னை, பெங்களூரு, ஜெய்பூர், குவஹாத்தி ஆகிய 4 இடங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மின்னணு சாதனங்கள், செல்போன்கள். சிம் கார்டுகள், ரூ.20-லட்சம் ரொக்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.