ஹிமாச்சலப் பிரதேசம், உனாவில் பா.ஜ.க தலைவர் லாக்பிர் சிங் லக்கி தாக்கப்பட்டு அவரிடமிருந்து 60000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உனா மாவட்டம் ஹரோலி பகுதியில் அரங்கேறிய இந்த கொள்ளையடிப்புச் சம்பவம் துப்பாக்கிமுனையில் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப்பின் அங்கு கூடிய அப்பகுதி மக்கள் லாக்பிர் சிங்கை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்த விசாரணையைத் துவங்கியிருப்பதாக துணைக் கண்காணிப்பு ஆய்வாளர் மோகன் ராவத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம், கடந்த புதன் கிழமை மாலை நடைபெற்றுள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது. லாக்பிர் சிங், அன்று தஹ்லிவால் தொழிற்சாலைப் பகுதியிலிருந்து, கோன்ட்பூர் ஜைசந்த்திலுள்ள தன் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது, வேறொரு வாகனம் அவரை முந்திச்சென்று அவர் வண்டியின் மீது மோதியுள்ளது.
இதையும் படிக்க : உங்களுடைய பான் கார்டு செயல்பாட்டில் உள்ளதா?
உடனே வண்டியை நிறுத்தி யாருக்கும் அடிபட்டுவிட்டதா என அவர் பார்க்க முற்பட்டபோது, இடித்த வண்டியிலிருந்து வாள் மற்றும் இரும்புக்கம்பிகளுடன் வெளியே வந்த கும்பல், அவரைத் தாக்கி பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க தலைவர் படுகாயம் அடைந்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் உனாவில் சட்டம் ஒழுங்கு சரிவர பாதுகாக்கப்படவில்லை என உனா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சட் பல் சட்டி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனே கைதுசெய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


